Comic Con: காமிக் ரசிகர்களின் திருவிழா; ஸ்பைடர் மேன், பேட் மேன், லூஃபி வேடமிட்டு...
ஆக்ஷனில் மிரட்டும் மிஷன் இம்பாஸிபிள் கடைசி பாகம் டீசர்!
உலகளவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ள ‘மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹாலிவுட் பட ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களுள் ஒன்றான ‘மிஷன்: இம்பாஸிபிள்’ கடைசி பாகமாக படமெடுக்கப்பட்டுள்ள ‘மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங்’ வரும் மே மாதம் 25-ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் இப்படம் திரையிடப்படுகிறது.
இந்த நிலையில், இன்று(பிப். 10) இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள 30 நிமிட டீசர் விடியோவில் சாகசங்களுக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு தீனி போட்டுள்ளார் டாம் க்ரூஸ்.