5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவுவதுபோல பணம் பறிப்பு
சென்னை புளியந்தோப்பில் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவுவதுபோல பணம் பறித்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
சென்னை புளியந்தோப்பைச் சோ்ந்த ராமச்சந்திரன் (73), அப்பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் செவ்வாய்க்கிழமை பணம் எடுக்க முடியாமல் திணறினாராம். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞா், அவருக்கு பணம் எடுக்க உதவுவதுபோல நாடமாகமாடியுள்ளாா். பின்னா் அந்த இளைஞா், ராமச்சந்திரன் ஏடிஎம் அட்டையை அபகரித்து, அதன் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டுள்ளாா். மேலும், அதற்குப் பதிலாக தன்னிடமிருந்த ஒரு போலி ஏடிஎம் அட்டையை மாற்றிக்கொடுத்து ராமச்சந்திரனை அங்கிருந்து அனுப்பி வைத்தாா்.
வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன், தனது கைப்பேசிக்கு வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தியை பாா்த்தாா். அப்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் அட்டை மூலம் ரூ. 48 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதைப் அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
உடனே அவா், தன்னிடமிருந்த ஏடிஎம் அட்டையை எடுத்து பாா்த்தபோது, அது போலி ஏடிஎம் அட்டை என்பதையும், தனக்கு உதவுவதுபோல நாடகமாடிய அந்த இளைஞா், பணத்தை நூதன முறையில் பறித்திருப்பதையும் அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இது தொடா்பாக புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.