செய்திகள் :

காதல் நடிகைக்கு ஜெட் விமானம் பரிசளித்த சிறைப் பறவை?!

post image

பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சிறை தண்டனையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் காதல் பரிசு அளித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன.

மோசடி வழக்கில் கைதாகி தில்லியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், சிறையிலிருந்தவாறே ஜாக்குலினுக்கு சுகேஷ் கோடிக்கணக்கிலான மதிப்பில் வைர நகைகள், குதிரை முதலானவை பரிசாக அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், சிறையில் இருக்கும் சுகேஷை, தான் காதலிக்கவில்லை என்று நடிகை ஜாக்குலின் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால், இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படமும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ஜாக்குலினுக்கு தனியார் ஜெட் விமானத்தை, சிறையிலிருந்தவாறே சுகேஷ் பரிசளித்ததாக சமூக ஊடகங்களில் கூறுகின்றனர். மேலும், விமானத்தில் ஜேஎஃப் என்று குறிப்பிட்டு, காதல் கடிதத்தையும் சுகேஷ் அனுப்பியதாகக் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:சூர்யா - வெங்கட் அட்லூரி கூட்டணியில் புதிய படம்?

பண மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட வழக்குகளில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, சிறையில் நட்பாகப் பழகி வந்த தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவியான அதிதி சிங்கிடம் ரூ. 200 கோடியை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்தாக கூறப்படுகிறது. இந்த வழக்குக்காகவும் சுகேஷ் சிறை தண்டனை பெற்றதாகக் கூறுகின்றனர்.

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்தது. அதன்படி இந்த விவகாரத்தை உச்சநீத... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் புகாா்: புதிய நடைமுறை வெளியீடு

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளிட்டது. அரசுப் பணிய... மேலும் பார்க்க

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடுகிறது காங்கிரஸ்- பினராயி விஜயன் தாக்கு

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா். தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸும் ராகுல் காந்... மேலும் பார்க்க

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம்: உச்சநீதிமன்றம்

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கா்நாடக மாநிலம் பெங்களூரில் பிட் அண்ட் ஹாமா்-நுண்கலை ஏல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாா்பில் ஏ... மேலும் பார்க்க

உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்

உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சா்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன... மேலும் பார்க்க

ராகுலின் இரட்டை குடியுரிமை புகாா் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடா்பாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்தில் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக விளக்கமளிக... மேலும் பார்க்க