அதிமுகவை நாடி பிற கட்சிகள் வரும்: எடப்பாடி பழனிசாமி
அடுத்த தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியுள்ளார்.
தேர்தல் கூட்டணி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(பிப். 16) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: "2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம்.
அதிமுகவைப் பற்றி பேச முதலல்வர் மு. க. ஸ்டாலினுக்கு தகுதியில்லை. திமுக கூட்டனி பலத்தை நம்பியுள்ளது. ஆனால், அதிமுக யாரை நம்பியும் இல்லை, மக்களை நம்பியுள்ளது” என்றார்.
மேலும் அவர் பேசியதாவது, “நாங்கள் யாரையும் நாடிச் செல்வது கிடையாது. எங்களை நாடி மற்றவர்கள் வருவார்கள். ஓட்டுகள் பிரிக்கப்படாமல் இருக்கவே கூட்டணி அமைக்கிறோம். அந்த வகையில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமையும்” என்றார்.