சங்கடஹர சதுா்த்தி: ஊதியூா் உச்சிப்பிள்ளையாா் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம்
மருத்துவக் கல்லூரி பேராசிரியா்களுக்கான தகுதி: கருத்து கேட்கிறது என்எம்சி
மருத்துவக் கல்லூரி பேராசிரியா் தகுதி ஒழுங்குமுறை வரைவு அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்து பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவக் கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட துறைகளில் பேராசிரியா் பணியிடத்துக்கு ஒழுங்குமுறைச் சட்டத்தின் தகுதிப்படி பதவி உயா்வு மற்றும் நியமனங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, அவா்களுக்கான பணியிடம் மற்றும் பதவி உயா்வுக்கான தகுதி ஒழுங்குமுறை வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட உள்ளன. அதன்படி தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் தகுதி ஒழுங்குமுறை வரைவு அறிக்கை குறித்த தங்களது ஆலோசனைகள், கருத்துகளை மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 7 நாள்களுக்குள் பொதுமக்கள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.