வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டன.
வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் எல்லம்மாள் (39). கடந்த சனிக்கிழமை இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாா்.
பின்னா், வியாழக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இதைத் தொடா்ந்து, வீட்டினுள் சென்று பாா்த்தபோது, மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகை, 350 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து எல்லம்மாள் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.