MGR - எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VI...
Rakesh Rosha: ``தென்னிந்தியத் திரைத்துறை இன்னும் முன்னேறவே இல்லை"- பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ரோஷன்!
இந்தியத் திரைப்படத் துறை என்றாலே அது பாலிவுட்தான் என்ற பிம்பம் ஒருகாலத்தில் இருந்தது. பாலிவுட்தான் பெரும் பட்ஜெட் படங்கள்... புதிய தொழில்நுட்பப் பயன்பாடு என இந்திய சினிமாவை காப்பாற்றுகிறது என்றெல்லாம் பேசப்பட்ட காலம் அது. அதே நேரம், தென்னிந்திய சினிமா கதைக்கருவை மட்டுமே நம்பி தயாரிக்கப்பட்ட படங்கள் வெளியாகி, பெரும் வெற்றிகளைக் குவித்து வந்தது. அதனால், அப்போதைய பாலிவுட், தென்னிந்திய சினிமாவை கீழாகப் பார்த்து விமர்சித்து வந்ததும் மறுப்பதற்கில்லை. ஆனால், சமீப வருடங்களில் தென்னிந்தியத் திரைத்துறை இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றுவருகிறது.
எந்திரன், பாகுபலி, கே.ஜி.எஃப், புஷ்பா 1 & 2, பொன்னியின் செல்வன், அமரன், லக்கி பாஸ்கர், சத்யம் சுந்தரம், காந்தாரா, மது வடலாரா எனத் தொழில்நுட்ப ரீதியிலும், கதை வடிவிலும் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது தென்னிந்தியத் திரைத்துறை. இதே சூழலில், பாலிவுட் முன்புபோல தன் வெற்றிகளை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக திணறுகிறது.
இந்த நிலையில், கிரிஷ் உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் ராகேஷ் ரோஷன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தென்னிந்திய படங்களான KGF-2, புஷ்பா 2 ஆகியப் படங்களின் வெற்றியைப் பற்றிப் பேசினார்.
அப்போது, ``தென்னிந்தியத் திரைத்துறை இன்னும் முன்னேறவே இல்லை. ஏனெனில் song - action - dialogue - emotions என்ற பழைய பாணியுடன்தான் இன்னும் அவை தொடர்கின்றன" என்றார்.
ராகேஷ் ரோஷனின் இந்தக் கருத்துகள் சமூக ஊடங்களில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. ஒரு சமூக ஊடகப் பயனர், ``தென்னிந்திய திரைப்படங்கள் தற்போது பாலிவுட்டை விட அதிக எண்ணிக்கையிலான வெற்றிப் படங்களையும், புதிய திரைக்கதையையும், வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களையும் வழங்குகின்றன. பாலிவுட்தான் ஒரேதிசையில் பயணிக்கிறது. சமீபகாலமாக பாலிவுட்டில் சொல்லிக்கொள்ளும்படியான திரைப்படங்கள் மிக மிகக் குறைவு" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இயக்குநரின் கருத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது.
விரிவாக பேசுகிறது மதன் எழுதிய Blockbuster தொடரான வந்தார்கள் வென்றார்கள் நூல். இப்போது நீங்கள் Vikatan Play-ல் இலவசமாக audio வடிவில் கேட்கலாம்
Vikatan App ஐ Download செய்யுங்க வந்தார்கள் வென்றார்கள் புத்தககத்தைக் கேளுங்க