செய்திகள் :

Madha Gaja Raja: `என்னுடைய பெயர் நல்ல இயக்குநர் பட்டியலில் வராதது வருத்தமே' - இயக்குநர் சுந்தர் சி

post image
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி... என பல ஸ்டார் காஸ்ட்டுடன் உருவான 'மதகஜராஜா' திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் சுந்தர் சி, 'என்னுடைய பெயர் நல்ல இயக்குநர் என்ற பட்டியலில் வராதது வருத்தம்' என்று பேசியிருக்கிறார்.

சுந்தர் சி, விஷால்

இது குறித்துப் பேசியிருக்கும் சுந்தர் சி, "13 ஆண்டுக்குப் பின்னாடி இந்தப் படம் தியேட்டருக்கு வருது. 'இவ்வளவு நாள் ஆச்சு..என்ன பெரிசா சாதிச்சிட போகுது' அப்டினு நிறையபேர் பேசுனாங்க. ஆனா, இவ்வளவு பெரிய வரவேற்புக் கிடைச்சது ரொம்ப பெரிய விஷயம். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்கும் படங்களையும், தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களையும் கொடுத்து வரும் என்னுடைய பெயர் நல்ல இயக்குநர் என்ற பட்டியலில் வராதது வருத்தம். விஷால் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அதை வார்த்தையில சொல்ல முடியாது. இந்த வெற்றி விஷாலோட உழைப்புக்குச் சமர்ப்பணம். இவ்வளவு நாளுக்குப் பிறகும் இவ்வளவு வரவேற்புக் கிடைத்திருப்பது எனக்கும் பெரும் மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறியிருக்கிறார்.

Madha Gaja Raja: "அவ்வளவு உடல் நல பிரச்னைகளிலும் நான்..." - விஷால் உருக்கம்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி... என பல ஸ்டார் காஸ்ட்டுடன் உருவான 'மதகஜராஜா' திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்நிலைய... மேலும் பார்க்க

GV Prakash: `அப்பா நீ எங்க இருக்க?' - ஜி.வியை ஓடி வந்து அணைத்துக் கொண்ட மகள் அன்வி | க்யூட் மொமென்ட்

ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் `கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி பேசப்பட்டது.இந்த `கிங்ஸ்டன்' திரைப்படத்தை தயாரித்திருப்பதும் ஜி.வி. பிரகாஷ்தான். இதனை தாண்டி செல்வராகவன் இயக்கத்தில... மேலும் பார்க்க

Vidaamuyarchi: வெளியானது அஜித்தின் 'விடாமுயற்சி' பட ட்ரெய்லர்! - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

நடிகர் அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க