குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
டாப் ஆர்டர் சொதப்பல்; பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்ட சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பையில் விராட் கோலி விளையாடுகிறாரா?
டாப் ஆர்டர் சொதப்பல்
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. கேப்டன் ஷான் மசூத் 11 ரன்களிலும், முகமது ஹுரைரா 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், களமிறங்கிய பாபர் அசாம் 8 ரன்கள் எடுத்தும், கம்ரான் குலாம் 5 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதனால், பாகிஸ்தான் அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சரிவிலிருந்து மீட்ட சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான்
பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற, சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் எடுத்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ரோஹித் சர்மா!
சௌத் ஷகீல் 56 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.