செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ரோஹித் சர்மா!

post image

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பினையும் இந்தியா இழந்தது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிக்க: இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் இருக்கிறது: கருண் நாயர்

பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரும் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியை தொடங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபடும் விடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த விடியோவில் ரோஹித் சர்மா பல்வேறு விதமான ஷாட்டுகளையும் விளையாடி பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க முடிகிறது.

இதையும் படிக்க: டெஸ்ட் தொடர் தோல்வி எதிரொலி: இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, மும்பை அணியுடன் இணைந்து அண்மையில் பயிற்சி மேற்கொண்டார். இதனால், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக ஜனவரி 23 ஆம் தேதி மும்பை அணி விளையாடும் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஸ்மித் தலைசிறந்தவர் கிடையாது: ரிக்கி பாண்டிங்

ஸ்டீவ் ஸ்மித்தை தலைசிறந்தவர் எனக் கூறமுடியாதென ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது 35ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார். மேலும் தனது 10,000 டெஸ்ட் ரன்களை கடந்து அசத்தியுள்... மேலும் பார்க்க

புதிய உலக சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்..! எதில் தெரியுமா?

ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது 35ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார். மேலும் தனது 10,000 டெஸ்ட் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். ஆஸி. வீரர்களில் ந... மேலும் பார்க்க

ஐசிசி டி20 தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறிய வருண் சக்கரவர்த்தி, 2ஆம் இடத்தில் திலக் வர்மா!

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களான திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி முன்னேறியுள்ளார்கள்.இங்கிலாந்துடனான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதில் சிறப்பாக வி... மேலும் பார்க்க

மழை குறுக்கீடு: முதல்நாள் முடிவில் 300 ரன்களை கடந்து வலுவான நிலையில் ஆஸி.!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 81.1 ஓவரில் 330/2 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது. வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நடைப... மேலும் பார்க்க

35ஆவது சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்..!

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்துள்ளார். வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் ... மேலும் பார்க்க

மோகன்லாலை இயக்கிய அனுபவம் பகிர்ந்த பிருத்விராஜ்..!

நடிகர் மோகன்லாலை இயக்குவது எளிமையான வேலை என இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டா... மேலும் பார்க்க