செய்திகள் :

வரம் தரும் வாரம்!

post image

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜனவரி 17 - 23) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். கடினமாக உழைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் புதியவர்களுக்கு கடன் தர வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் பயன் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளின் திட்டங்களை எதிரிகள் அறிவார்கள். கலைத் துறையினர் வாய்ப்புகளைத் தேடி பெறுவீர்கள். பெண்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனத்துடன்

ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொறுப்பாக நடந்துகொள்வீர்கள். கடமைகளைச் செய்வீர்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். பேச்சில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களின் பணிகளில் பங்கெடுப்பீர்கள். வியாபாரிகள் தனித்தே முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி வருமானம் ஏற்றம் தரும்.

அரசியல்வாதிகள் பயணங்களில் கவனம் தேவை. கலைத் துறையினர் ரசிகர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் மாற்றங்கள் உண்டு. குழப்பமான விஷயங்களிலும் நல்ல முடிவெடுப்பீர்கள். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும். வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பீர்கள், வியாபாரிகள் கூட்டாளிகளை நம்புவீர்கள். விவசாயிகளுக்கு செலவு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளைகளை மதிப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடனிருப்போரை அனுசரித்து நடப்பீர்கள். நேர்மையான சிந்தனைகளைக் கூட்டுவீர்கள். பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். வழக்குகள் தாமதமாகும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் நிறைவேற்றுவார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து விற்பனையைக் கையாளவும்.

அரசியல்வாதிகள் காரியங்களில் வெற்றிவாகை சூடுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆதரவு உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோயில் பணிகளில் ஈடுபடுவீர்கள். கடன்களை அடைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்துவிடுவீர்கள், வியாபாரிகள் தடைகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல மதிப்பு ஏற்படும்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் புகழைத் தக்கவைப்பீர்கள். பெண்களுக்கு பண வரவு உண்டு. மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தாமதித்த காரியங்கள் துரிதமாக நடைபெறும். விலகியிருந்த உறவினர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நவீன உப

கரணங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். விவசாயிகளுக்கு வருமானம் உயரும். விவசாயிகளுக்கு லாபம் உண்டு.

அரசியல்வாதிகளின் விருப்பங்கள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும். பெண்கள் செலவினங்களை சுபவிரயமாக மாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முக்கிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். பெரியோர்களைச் சந்தித்து புதிய பயிற்சிகளைப் பெறுவீர்கள்.

வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பி வியாபாரத்தில் ஈடுபடாதீர்கள். விவசாயிகள் பணியாளர்களிடம் அனுசரணையாக இருப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் காரியங்களில் சற்று இழுபறியான நிலை ஏற்படும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் யோசித்து முடிவுகளை எடுக்கவும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் மனக் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்கள் சுபகாரியங்களில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்,

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நிலம், வீடுகளை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். கடன் நிலுவை வசூலாகும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். சமுதாயத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரிள் சிறிய முதலீட்டில் வியாபாரத்தைத் தொடங்குவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை எடுப்பதைத் தள்ளிப் போடவும்.

அரசியல்வாதிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு பண வரவு குறையும். பெண்களுக்கு கணவருடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும், மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தன்னம்பிக்கையும் தனித்திறமையும் உயரும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உடனிருப்போரின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பீர்கள். வருமானமும் உயரும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிப்பதில் கவனம் தேவை.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடக்கவும். கலைத் துறையினருக்கு கவனத்துடன் இருக்கவும். பெண்கள் கோபத்தைக் குறைக்கவும். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல்படி நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜனவரி 17, 18.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். தீயவர்களைக் கண்டறிந்து ஒதுக்கிவிடுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

உத்தியோகஸ்தர்கள் பணிநிமித்தமாக வெளியூர் செல்வீர்கள். வியாபாரிகளுக்கு அனுகூலமான சூழல் நிலவும். விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும்

உயரும். கலைத் துறையினருக்கு பண வரவு இருக்கும். பெண்கள் பிறரை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜனவரி 19,20.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதார நிலை மேம்படும். குழந்தைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். தொழிலில் ஆர்வம் கூடும். நண்பர்களுக்கு உதவுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் தீரும். வியாபாரிகள் நவீன முறைகளைக் கையாள்வீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்தால் வருமானம் பெருகும்.

அரசியல்வாதிகள் கவனத்துடன் செயல்படுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் உறவினர்கள் வருகையால் மனம் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு ஆன்மிகச் சிந்தனைகள் மேலோங்கும்.

சந்திராஷ்டமம் - ஜனவரி 21, 22, 23.

அறிவோம்..

திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி தனிச்சிறப்புடன் விளங்குகிறார். இவரது வலது மேல் நோக்கிய திருக்கரத்தில் சின்முத்திரையும், இடது மேல்நோக்கிய திருக்கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய திருக்க... மேலும் பார்க்க

பூமாலை சாற்றி அருள் பெற்றவர்..

"வனப் பகுதியில் தவமிருந்த ஜாபாலி எனும் மகரிஷியின் வேண்டுகோளின்பேரில், இரண்யனை நரசிம்மர் வதம் செய்து உக்ர நரசிம்ம சுவாமியாக (கோபம் கொண்டவராக) மூன்று கண்களுடன் (திரி நேத்திரத்துடன்) காட்சி கொடுத்தார்' எ... மேலும் பார்க்க

சீரான வாழ்வளிப்பார்...

கலைசை, கலைசாபுரி, கோவிந்தபுரம்... என்றெல்லாம் போற்றப்படும் தலத்தின் இன்றைய பெயர் "தொட்டிக்கலை'. இத்தலத்தில் பசுக்களின் கொட்டில்கள் அதிகம் இருந்ததாலும், தொழுவம் உள்ள கழுநீர்த் தொட்டியை ஆதாரமாக வைத்து "... மேலும் பார்க்க

பொங்கல் நாளில் வழிபட...

வேடர் குலத்தைச் சேர்ந்த வீரன் கிழங்குகளைக் கிள்ளும்போது, வீரை மரத்தடியில் இருந்த பெரிய புற்றில் வள்ளிக்கிழங்கு கொடியைப் பார்த்தான். அதனை கிள்ளி எடுக்கத் தன்னிடமிருந்த ஆயுதத்தை கீழே போட்டபோது, ரத்தம் ப... மேலும் பார்க்க

நலம் தரும் நடராசர் தரிசனம்

வைகைக் கரை வாதவூரில், அந்தணர் குலத்தில் சம்புபாத சரிதர்} சிவஞானவதிக்கு மகனாகப் பிறந்தார் வாதவூரர். இவர் கல்வியில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரானார். புலமை மிக்கவருக்கு "தென்னவன் பிரம... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்..!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜனவரி 10 - 16) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)வழக்குகள் சாதகம... மேலும் பார்க்க