அறிவோம்..
திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி தனிச்சிறப்புடன் விளங்குகிறார். இவரது வலது மேல் நோக்கிய திருக்கரத்தில் சின்முத்திரையும், இடது மேல்நோக்கிய திருக்கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய திருக்கரத்தில்
சிவஞான போதமும் காணப்படுகின்றன. திருவடியின் கீழ் ஆமை இருக்கிறது. திருவடி ஆமையை மிதித்திருப்பது புலனடக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த மூர்த்தி ஸ்ரீஹரி குரு சிவயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
மூவலூர் மார்க்க சகாயேசுரர் திருக்கோவில் கொடிமத்தின் தென்திசையில் தட்சிணாமூர்த்தி காட்சி அளிக்கிறார்.
சீர்காழி திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சட்டநாதருக்கு வெள்ளிக்கிழமைகள்தோறும் அர்த்த ஜாமத்தில் புனுகுகாப்பு சாற்றப்படுகிறது. பின்னர், வடைமாலையும், பாயசான்னமும் நிவேதிக்கப்பெறும். இங்கு தேங்காய் உடைக்காமல், அப்படியே மட்டையோடு முழுவதுமாக நிவேதனம் செய்கின்றனர்.
நாட்டில் பிரம்ம தேவனுக்கு இரண்டு இடங்களில் மட்டுமே கோயில்கள் உள்ளன. ஒன்று ஆஜ்மீரில் உள்ள புஷ்கரிலும், மற்றொன்று கும்பகோணத்திலும் அமைந்துள்ளன.
ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.