செய்திகள் :

MGR:``The Great MGR... அவர் மேற்கொண்ட முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்" - பிரதமர் மோடி

post image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவை இன்று அ.தி.மு.க தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், எம்.ஜி.ஆர் குறித்து அவர் பேசிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், ``எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த தினம் இன்று. விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர். சுகாதாரம், தொழில் பயிற்சி திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள், கல்வி உட்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு, பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு என ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர்.

உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழைப் பெருமைப்படுத்தியவர். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதியான டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'அமெரிக்க அதிபராக மீண்டும் ட்ரம்ப்' - இந்தியா, சீனாவுடனான உறவு எப்படியிருக்கும்?

மீண்டும் `ட்ரம்ப்’கடந்த 2017 - 2020-ம் ஆண்டு வரையில் அமெரிக்க அதிபராக இருந்தவர், டொனால்டு ட்ரம்ப். இவர் நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றிபெற்றார். இதையடுத்து வரும் 20.1.2025 அன்று பதவியேற்கவுள்ளார். ஆ... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : `வீரர்கள் முதல் கலெக்டர் வரை அவமதிப்பா?’ - சர்ச்சைகளும் சம்பவங்களும்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலெக்டர் இருக்கையிலிருந்து எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விழாவில் மக்கள் சங்கடப்படும் வகையி... மேலும் பார்க்க

TVK: '2026 தான் பிரதான இலக்கு; இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்' - தவெக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தவெக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.இது தொடர்பாக வெளியான அறிக்கையில், " தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி ம... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் : `இன்பநிதி நண்பர்களுக்காக... மதுரை கலக்டர் அவமதிப்பு’ - அண்ணாமலை குற்றச்சாட்டு

நேற்றைய தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி, அவரின் மகன் இன்பநிதி மற்றும் இன்பநிதியின் நண்பர்களும் கலந்துகொண்டனர். இன்பநிதி மற்றும் அ... மேலும் பார்க்க

America:``அதிகாரக் குவிப்பு அதிகார துஷ்பிரயோகத்துக்குதான் வழிவகுக்கும்"- மக்களை எச்சரித்த ஜோ பைடன்

அமெரிக்கா அதிபர் பதவியிலிருந்து இன்னும் சில தினங்களில் விலகும் ஜோ பைடன், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ``அமெரிக்காவில் ஒரு சிலப் பணக்காரர்களிடையே ஆபத்தான அதிகாரக் குவிப்பு போன்ற சூழல் உருவ... மேலும் பார்க்க