செய்திகள் :

அலங்காநல்லூர் : `இன்பநிதி நண்பர்களுக்காக... மதுரை கலக்டர் அவமதிப்பு’ - அண்ணாமலை குற்றச்சாட்டு

post image

நேற்றைய தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி, அவரின் மகன் இன்பநிதி மற்றும் இன்பநிதியின் நண்பர்களும் கலந்துகொண்டனர்.

இன்பநிதி மற்றும் அவரது நண்பர்கள் அமர்வதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தள்ளி அடுத்த இருக்கையில் அமர சொன்னதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த சம்பவத்தை "தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்." என கண்டித்துள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை பதிவு:

அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவில், "மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மேடை

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.

முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்." என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோவையும் இணைத்துள்ளார்.

மதுரை ஆட்சியர் விளக்கம்:

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மதுரை ஆட்சியர் சங்கீதா, "தவறான தகவல் பரவி வருகிறது. யாரும் யாரையும் அவமதிக்கவில்லை விழா சுமூகமாக நடைபெற்றது. ஒரு அமைச்சர் எழுந்து நிறு பேசும்போது மாவட்ட ஆட்சியர் நிற்க வேண்டும் என்ற நெறிமுறைப்படிதான் (Protocal) நின்றேன். யாரும் என்னை நிற்கவோ, எழுந்து போகவோ சொல்லவில்லை. இங்கு நடந்தது எதுவும் தெரியாமல், கிடைக்ககூடிய புகைப்படங்களை வைத்து ஆளாளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல முடியாது." என்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'அமெரிக்க அதிபராக மீண்டும் ட்ரம்ப்' - இந்தியா, சீனாவுடனான உறவு எப்படியிருக்கும்?

மீண்டும் `ட்ரம்ப்’கடந்த 2017 - 2020-ம் ஆண்டு வரையில் அமெரிக்க அதிபராக இருந்தவர், டொனால்டு ட்ரம்ப். இவர் நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றிபெற்றார். இதையடுத்து வரும் 20.1.2025 அன்று பதவியேற்கவுள்ளார். ஆ... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : `வீரர்கள் முதல் கலெக்டர் வரை அவமதிப்பா?’ - சர்ச்சைகளும் சம்பவங்களும்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலெக்டர் இருக்கையிலிருந்து எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விழாவில் மக்கள் சங்கடப்படும் வகையி... மேலும் பார்க்க

MGR:``The Great MGR... அவர் மேற்கொண்ட முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்" - பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவை இன்று அ.தி.மு.க தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், எம்.ஜி.ஆர் குறித்து அவர் பேச... மேலும் பார்க்க

TVK: '2026 தான் பிரதான இலக்கு; இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்' - தவெக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தவெக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.இது தொடர்பாக வெளியான அறிக்கையில், " தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி ம... மேலும் பார்க்க

America:``அதிகாரக் குவிப்பு அதிகார துஷ்பிரயோகத்துக்குதான் வழிவகுக்கும்"- மக்களை எச்சரித்த ஜோ பைடன்

அமெரிக்கா அதிபர் பதவியிலிருந்து இன்னும் சில தினங்களில் விலகும் ஜோ பைடன், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ``அமெரிக்காவில் ஒரு சிலப் பணக்காரர்களிடையே ஆபத்தான அதிகாரக் குவிப்பு போன்ற சூழல் உருவ... மேலும் பார்க்க