தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
BB Tamil 8: ``நீ பண்ணத நியாயப்படுத்தாத ராணவ்..." - கடிந்துகொண்ட பவித்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான ( ஜனவரி 17) மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் 6 -ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் பவித்ராவிற்கும், ராணாவிற்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. " பவித்ராவை ராணவ் டார்ச்சர் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கு. ஆனா நான் உங்ககிட்ட அனுமதி கேட்டுதான் கலாய்க்கவே செய்தேன்.
நீங்க விளையாட்டா எடுத்துக்குறீங்க அதுனால நானும் விளையாட்டுக்குதான் பண்றேன்னு சொல்லிட்டு பண்னேன். உங்ககிட்ட மட்டும் இதை பண்ணல பவித்ரா எல்லார் கிட்டையும்தான் பண்னேன்" என்றார் ராணவ். இதனைத்தொடர்ந்து பேசிய பவித்ரா, " எதை விளையாட்டுக்கு பண்றீங்க, பண்ணலன்னு தெரியமாட்டிங்குது ராணவ். என்னைய என்ன வேணாலும் சொல்லு. ஆனா நீ பண்ணத நியாயப்படுத்தாத' என்று கோப்பப்படுகிறார்.