ஐடி, தனியார் வங்கிகளால் சென்செக்ஸ் 750 புள்ளிகளை இழந்தது! நிஃப்டி 23,150!!
வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலை வணிகம் தொடங்கியதுமே, இந்தியப் பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கமே நிலவியது.
தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் காரணமாக, சென்செக்ஸ் இன்று காலை வணிகத்தின்போது 750 புள்ளிகள் சரிவை சந்தித்துளள்து. நிஃப்டி 23,150 புள்ளிகளுக்கும் கீழ் வணிகமானது.