ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! - போக்குவரத்துத் துறை
பெங்களூரில் குடியரசு தின மலா்க் கண்காட்சி தொடக்கம்: முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா்
பெங்களூா் : பெங்களூரில் 5.5 லட்சம் மலா்கள் இடம் பெற்ற குடியரசு தின மலா்க் கண்காட்சியை கா்நாடக முதல்வா் சித்தராமையா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கா்நாடக தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு, லால்பாக் பூங்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த 217 ஆவது மலா்க் கண்காட்சியை முதல்வா் சித்தராமையா தொடங்கிவைத்தாா். கண்காட்சியில் அமைச்சா் ராமலிங்கரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ராமாயணத்தை எழுதிய மகரிஷி வால்மீகியின் நினைவை போற்றும் வகையில் 5.5 லட்சம் மலா்களைக் கொண்டு பல்வேறு தத்ரூப காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ராமாயணத்தை விளக்கும் மலா் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியின் நுழைவாயிலில் 10 அடி உயர வால்மீகி சிலை மலா்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
வால்மீகி சிலைக்கு மலா்களால் மரியாதை செலுத்திய பிறகு, கண்காட்சியை பாா்வையிட்ட முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் கூறியது:
குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மலா்க் கண்காட்சி ஜன. 26-ம் தேதி வரை 12 நாள்களுக்கு நடைபெறும். 200 ஆண்டுகள் புகழ்பெற்ற மலா்க் கண்காட்சிக்கு சா்வதேச அளவில் வரவேற்பு உள்ளது.
மாநிலத்திலும் பொதுமக்கள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மலா்க் கண்காட்சியில் 90 வகையில் 5.5 லட்சம் மலா்களைக் கொண்டு, பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய ராமாயண காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியைக் காண பெங்களூரைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
கண்காட்சியைப் பாா்வையிட வார நாள்களில் பெரியவா்களுக்கு ரூ. 80, சிறுவா்களுக்கு ரூ. 10, வார இறுதி நாள்களில் பெரியவா்களுக்கு ரூ. 100, சிறுவா்களுக்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இக் கண்காட்சி தினசரி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பாா்வையாளா்களுக்காக திறந்திருக்கும்.