செய்திகள் :

அமோக வரவேற்பு: வெளிநாடுகளில் வெளியாகும் குடும்பஸ்தன் திரைப்படம்!

post image

நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பினால் வெளிநாடுகளிலும் ரிலீஸாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய படம்தான் குடும்பஸ்தன்.

இந்தப் படத்தில் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ளார். படம் பார்த்தவர்கள் ஒரு மிடில் கிளாஸ் நாயகனாக வாழ்ந்துள்ளதாக புகழ்கிறார்கள்.

சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இந்தப் படத்துக்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

குடும்பஸ்தன் திரைப்படம் இதுவரை ரூ. 8 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் வெளிநாட்டு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனாடா, ஐக்கிய அரபு அமீரகம், வலைகுடா நாடுகளில் வெளியாகவிருக்கிறது.

ஜன.31ஆம் தேதி முதல் ஐயங்காரன் இண்டர்நேஷ்னல் இந்தப் படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பஸ்தன் போஸ்டர்.

தமிழ் தீ பரவட்டும்... பராசக்தி புதிய போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ள டீசரை நேற்று (ஜ... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் மாநாடு!

நடிகர் சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு திரைப்படம் மறுவெளியீடாகிறது. நடிகர் சிம்பு - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய... மேலும் பார்க்க

ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு சர்வதேச அங்கீகாரம்!

ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியளவில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்கிற பாராட்டுகளைப் பெற்றவர் ரவி வர்மன். தமிழில் ஆட்டோகிராஃப், தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, அந்... மேலும் பார்க்க

சந்தீப் ரெட்டி வங்கா - பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சந்தீப் ரெட்டி வங்கா - பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைபடங்கள் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா. அனிமல் திரைப்படத்து... மேலும் பார்க்க

தாய்லாந்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ஷ்ருதி ஹாசன்!

நடிகை ஷ்ருதி ஹாசன் தன் பிறந்த நாளை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இறுதியாக இவர் நடித்த சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. தற்போத... மேலும் பார்க்க

சாம்பியன் லீக்: விறுவிறுப்பாக முடிந்த லீக் சுற்று..! 36இல் 24 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி!

ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் சாம்பியன் லீக் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. மிகவும் பிரபலமான கால்பந்து தொடர்களில் இது முக்கியமானதாகும்.இதில் மொத்தம் 36 அணிகள் பங்குபெற்றன. அதில் அடுத்த கட்டதுக... மேலும் பார்க்க