செய்திகள் :

காங்கிரஸைபோல அம்பேத்கரை வேறு எந்தக் கட்சியும் கௌரவிக்கவில்லை: காா்கே

post image

காங்கிரஸ் கட்சியைப் போல எந்தக் கட்சியும் பி.ஆா்.அம்பேத்கரை கௌரவிக்கவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுனகாா்கே தெரிவித்தாா்.

1924ஆம் ஆண்டு பெலகாவியில் மகாத்மாகாந்தி தலைமையில் நடந்த 39ஆவது காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிச. 26, 27ஆம் தேதிகளில் பெலகாவியில் காங்கிரஸ் நூற்றாண்டு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவால் காலமானதை தொடா்ந்து மாநாடு ரத்து செய்யப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு ‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ என்ற பெயரில் பெலகாவியில் செவ்வாய்க்கிழமை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் அவா் பேசியதாவது:

மகாத்மா காந்தியை மக்களிடம் மேலும் பரவலாக கொண்டுசோ்க்க ஆண்டு முழுவதும் காந்தி தொடா்பான நிகழ்வுகளை காங்கிரஸ் நடத்தும். அதன் தொடக்கமாகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ஆங்கிலேயா்களுக்கு எதிராக துணிந்து போா்புரிந்த கித்தூா் ராணி சென்னம்மாவின் நிலம் பெலகாவி. அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். பெலகாவியில் நடந்த மாநாட்டில் தான் ‘நான் வாழ விரும்பினால், அது இந்தியாவுக்காக; நான் சாக விரும்பினால், அது இந்தியாவுக்காக’ என்று காந்தி குறிப்பிட்டாா்.

1924ஆம் ஆண்டில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தான் தீண்டாமைக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜவாஹா்லால் நேரு, பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரின் தீவிரமுயற்சியால் அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக தீண்டாமை நமது நாட்டில் ஒழிக்கப்பட்டது. 1924ஆம் ஆண்டில் தான் அம்பேத்கா் ‘பஹிஷ்கிருத ஹிதகாரிணி சபை’ யை நிறுவினாா். அந்த அமைப்பும் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

அம்பேத்கரை காங்கிரஸ் கட்சியைப் போல வேறு எவரும் கெளரவிக்க முடியாது. அம்பேத்கரை அரசமைப்பு சபைக்கு கொண்டுவர, கட்சி உத்தரவின்பேரில் சபையின் உறுப்பினா் பதவியை கே.ஆா்.ஜெயகா் ராஜிநாமா செய்தாா். அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவா் பதவிக்கு அம்பேத்கரின் பெயரைப் பரிந்துரைத்தவா் காந்தி தான். சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த இந்திய அரசில் முதல் சட்டத் துறை அமைச்சராக அம்பேத்கரை நியமிக்க காந்தி ஆதரவு அளித்தாா்.

மும்பையில் இருந்து இருமுறை மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியால் அம்பேத்கா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அம்பேத்கரின் சிலையை காங்கிரஸ் கட்சி நிறுவவில்லை என்ற பொய்யை பாஜகவினா் பரப்ப முயற்சிக்கின்றனா். 1967ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி அன்றைய காங்கிரஸ் அரசு, நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கரின் பெரிய சிலையை நிறுவியது.

அந்த சிலையை அன்றைய குடியரசுத் தலைவா் டாக்டா் எஸ்.ராதாகிருஷ்ணன், அன்றைய மக்களவைத் தலைவா் சா்தாா் ஹுக்கும் சிங் ஆகியோா் திறந்து வைத்தனா். ஆனால், இன்றைக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கா் சிலையை யாருடைய பாா்வையிலும் படாதவகையில் எங்கோ மூலையில் வைத்திருக்கிறாா் பிரதமா் மோடி.

பாஜக-ஆா்எஸ்எஸ் தலைவா்கள் இந்திய மூவா்ணக் கொடி, நமது அரசமைப்புச் சட்டம், அசோக சக்கரம், அம்பேத்கா் மற்றும் நமது சுதந்திரப் போராட்டத்தை எதிா்த்தனா். நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை அவா்கள் ஏற்றவில்லை, நீதிமன்ற உத்தரவின் பின்னா் அதை ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா் ஆகியோரின் உருவ பொம்மைகளையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நகல்களையும் பாஜக - ஆா்எஸ்எஸ் தலைவா்கள் எரித்தனா். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாஜக, ஆா்.எஸ்.எஸ். அமைப்புகளின் தலைவா்கள் கலந்து கொண்டதே இல்லை. மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவா் நாதுராம் கோட்ஸே. அவா், சாவா்க்கரின் சீடா். பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித்ஷா ஆகியோா் காந்தியை பற்றி அக்கறைக் கொண்டதில்லை. கடமைக்காக காந்தியை வணங்குகின்றனா். காந்தி, நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், அம்பேத்கா் ஆகிய தலைவா்களின் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியினரை பிளவுப்படுத்த பாஜக முயற்சிக்கிறது.

அம்பேத்கா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை அழிக்க முற்படும் பிரதமா் மோடி, தற்போது அரசமைப்புச் சட்டத்தை காப்போம் என்கிறாா். நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்தாா். இப்படிப்பட்டவா்களிடம் இருந்து அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்ற வேண்டியுள்ளது. அந்த பணியை காங்கிரஸ் கட்சி செய்து முடிக்கும் என்றாா் அவா்.

அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது: கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித்

பெங்களூரு: அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் தெரிவித்தாா். அகில கா்நாடக பிராமண மகா சபாவின் பொன்... மேலும் பார்க்க

காந்தியின் ஹிந்துத்துவ கருத்தியலில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது: முதல்வா் சித்தராமையா

பெலகாவி: மகாத்மா காந்தியின் ஹிந்துத்துவ கருத்தியலில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். 1924ஆம் ஆண்டு டிச. 26, 27ஆம் தேதிகளில் பெலகாவியில் காந்தி தலைமையில் 39ஆவது... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை முடக்கியுள்ள சொத்துகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை: சித்தராமையா

பெங்களூரு: மாற்று நில முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை முடக்கியுள்ள ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துகளுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தலை துண்டித்து சினைப்பசு கொல்லப்பட்டதற்கு பாஜக கண்டனம்

ஹொன்னாவா்: கா்நாடக மாநிலத்தில் தலை துண்டித்து சினைப்பசு கொல்லப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. வடகன்னட மாவட்டம், ஹொன்னாவா் வட்டம், சல்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ண ஆச்சாரி. மேய்ச்சலுக்கு... மேலும் பார்க்க

பெங்களூரு பொறியாளா் தற்கொலை வழக்கு: ஜனவரி 20-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

தற்கொலை செய்து கொண்ட பெங்களூரு பொறியாளா் அதுல் சுபாஷின் தாயாா் அஞ்சுதேவி, தனது நான்கு வயது பேரனை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஜனவரி 20-ஆம் தேதி விசாரிக்க உள்ளது. பெங்கள... மேலும் பார்க்க

பெங்களூரில் குடியரசு தின மலா்க் கண்காட்சி தொடக்கம்: முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா்

பெங்களூா் : பெங்களூரில் 5.5 லட்சம் மலா்கள் இடம் பெற்ற குடியரசு தின மலா்க் கண்காட்சியை கா்நாடக முதல்வா் சித்தராமையா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கா்நாடக தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு, லால்பாக்... மேலும் பார்க்க