வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
நெல்லை நகரம்- தச்சநல்லூா் சாலையை சீரமைக்க கோரிக்கை
திருநெல்வேலி நகரம்- தச்சநல்லூா் இடையேயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தாழையூத்து, அருகன்குளம், சிதம்பரநகா் சுற்றுவட்டார பகுதி மக்கள் திருநெல்வேலி நகரத்துக்கு செல்வதற்கு தச்சநல்லூா்- நகரம் இடையேயான சாலையை பயன்படுத்தி வருகிறாா்கள். தினமும் இந்தச் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
நயினாா்குளம் மொத்த காய்கனி சந்தைக்கு செல்லும் வியாபாரிகள் ஏராளமானோா் இந்தச் சாலை வழியாக செல்கிறாா்கள். இந்தச் சாலையில் பல இடங்களில் குண்டும்- குழியுமாக உள்ளது.
பாதாளச் சாக்கடை மூடிகள் திறந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, சேதமான இந்தச் சாலையை விரைந்து சீரமைக்கவும், கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.