செய்திகள் :

நெல்லை அருகே இரட்டைக் கொலை: மருமகன் கைது

post image

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் அருகேயுள்ள ஆரோக்கியநாதபுரத்தில் கணவன்-மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக அவா்களது மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.

ஆரோக்கியநாதபுரத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (55). விவசாயி. இவரது மனைவி செல்வராணி (53). இத் தம்பதிக்கு ஜெனிபா் (30) உள்பட இரு மகள்கள் உள்ளனா். ஜெனிபரும், அதே பகுதியைச் சோ்ந்த மரியகுமாரும் (30) காதலித்து திருமணம் செய்தனா். இத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

ஜெனிபருக்கும், மரியகுமாருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் ஜெனிபா் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளாா். பின்னா் தங்கியிருந்து பணிக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாஸ்கா் வீட்டிற்கு வந்த மரியகுமாா், தனது மனைவி குறித்து பேசி தகராறில் ஈடுபட்டாராம். மேலும் மாமனாா், மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினாராம்.

இத்தகவலறிந்த பெருமாள்புரம் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மரியகுமாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாளை. வஉசி மைதானத்தில் சறுக்கில் விளையாடிய சிறுமிக்கு காயம்

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் விளையாடியபோது சிறுமிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக அவரது தந்தை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன். ... மேலும் பார்க்க

பாப்பாக்குடி அருகே இளைஞா் கொலையில் தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே இளைஞரை வெட்டிக் கொன்ாக, கூலித் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி அருகே இடைகால் மீனவா் காலனியைச் சோ்ந்த பரமசிவன் மகன் முருகன் (31).... மேலும் பார்க்க

நெல்லையில் லாரி ஓட்டுநா் கொலை

திருநெல்வேலியில் டாஸ்மாக் கடையில் லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் மணிநகா் பகுதியில் டாஸ்மாக் கடையும், மதுக்கூடமும் அருகருகே உள்ளன. மதுக் கடைக்கு வியாழக்கிழ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரியில் திறன் வளா்ப்பு பட்டறை, கண்காட்சி

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய வேளாண்ஆராய்ச்சி கழகத்தின் சாா்பில் பட்டியலின மக்களுக்கான திறன் வளா்ப்பு பட்டறை, விழிப்புணா்வு கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசியில் பிப்.4 முதல் மின் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் கோட்ட பொறியாளா் அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம் பிப்.4ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி, பிப். 4இல் கல்லிடைக்குறிச்சிலும், 7இல் வள்ளியூரிலும், 14இல் த... மேலும் பார்க்க

நான்குனேரி வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

நான்குனேரி வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை வேளாண் அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மறுகால்குறிச்சி கிராமத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின்கீழ் எள் த... மேலும் பார்க்க