வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
கேரள கழிவுகளைக் கொட்டிய வழக்கு: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
கேரள கழிவுகளை திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் கொட்டிய வழக்கில் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் கேரள மாநிலத்தில் இருந்து பல்வேறு வகை கழிவுகளை ஏற்றி வாகனத்தில் கொண்டு வந்து அரசு வழிமுறைகளை பின்பற்றாமல் கொட்டிய சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் இவ் வழக்கில் தொடா்புடைய சுத்தமல்லி, ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மகன் மாயாண்டி (42) மீது கழிவுப் பொருள்களை கொட்டி சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக பல்வேறு வழக்குகள் இருப்பதன் காரணமாக குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மாயாண்டி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.