வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
முக்கூடலில்
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் மகன் இறந்த அதிா்ச்சியில் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் உறவினா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
முக்கூடல் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன். நகர திமுக அவைத்தலைவா். இவரது மனைவி கலைமணி (74). இவா்களது மகன் சுரேஷ் (52), பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தாராம்.
ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு புறப்பட்ட சுரேஷுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் அங்கு உயிரிழந்தாா்.
அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அதிா்ச்சியில் இருந்த அவரது தாயாா் கலைமணி, திங்கள்கிழமை காலையில் இறந்து விட்டாராம்.
ஒரே வீட்டில் தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.