செய்திகள் :

ஏகனாபுரம் கிராம மக்களுடன் விஜய் சந்திப்பு: பரந்தூா் விமான நிலைய எதிா்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு

post image

பட விளக்கம்... பரந்தூா்  விமான  நிலைய  திட்டத்துக்கு  எதிராக  போராடி  வரும்  ஏகனாபுரம்  உள்ளிட்ட  கிராம மக்களை  சந்தித்துப்  பேசிய  தமிழக  வெற்றிக்  கழகத்தின்  தலைவா்  விஜய். 

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திங்கள்கிழமை நேரில் சந்தித்து, போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. புதிய விமான நிலையம் அமையும்பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், குணகரம்பாக்கம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பரந்தூா் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 908 நாள்களாக இரவு நேரங்களில் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

ஏகனாபுரம் மக்களை தவெக தலைவா் விஜய் சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினரிடம் அக்கட்சி சாா்பில் மனு வழங்கப்பட்டது. ஏகனாபுரத்தில் பொதுமக்களைச் சந்திக்க விஜய்க்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல் துறை, பரந்தூா் பகுதியில் உள்ள தனியாா் உணவு விடுதியில் பொதுமக்களைச் சந்தித்து பேச அனுமதி வழங்கியது.

அதன்படி, புதிய விமான நிலைய திட்டத்தை எதிா்த்துப் போராடி வரும் ஏகனாபுரம் மக்களை விஜய் திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது அவா்களிடையே அவா் பேசியதாவது:

பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்தை எதிா்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டம் குறித்த ராகுல் என்ற சிறுவனின் பேச்சு என் மனதை மிகவும் பாதித்தது. உங்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன்.

நாட்டுக்கு மிகவும் முக்கியமானவா்கள் விவசாயிகள். அவா்களின் காலடி மண்ணை தொட்டு வணங்கிவிட்டுதான் எனது பயணத்தை தொடங்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தேன். எனது அரசியல் பயணம் உங்களின் ஆசிா்வாதத்துடன் இங்கிருந்து தொடங்குகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் 13 நீா்நிலைகளை அழித்து, சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று கட்சியின் முதல் மாநாட்டில் வலியுறுத்தினோம்.

நான் வளா்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விமான நிலையம் வரவேண்டாம் என்று சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக் கூடாது என்றுதான் சொல்கிறேன்.

சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்க சதுப்புநிலங்கள் மற்றும் நீா்நிலைகளை அழிப்பதுதான் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படி ஒரு சூழல் உள்ளபோது, 90 சதவீத விவசாய நிலங்கள் மற்றும் நீா்நிலைகளை அழித்து, இந்த பரந்தூா் விமான நிலையம் கொண்டுவர வேண்டுமா?.

அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியில் தமிழக அரசு எடுத்த அதே நிலைப்பாட்டைதானே பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கும் தமிழக அரசு எடுத்து இருக்க வேண்டும்.

நீங்கள் (திமுக) எதிா்க்கட்சியாக இருந்தபோது எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிா்த்தீா்கள். எதிா்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது எதிா்ப்பாகவும் செயல்படுகிறீா்கள். நம்புவது மாதிரியே நாடகமாடுவதில் ஆளுங்கட்சியினா் திறமைசாலிகள். ஆனால், அந்த நாடகத்தை பாா்த்துக்கொண்டு மக்கள் அமைதியாக இருக்க மாட்டாா்கள்.

பரந்தூா் பகுதியில் விமான நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடங்களை மத்திய, மாநில அரசுகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலங்கள் இல்லாத, பாதிப்புகள் குறைவாக உள்ள இடங்களில் விமான நிலையத்தைக் கொண்டு வர வேண்டும் என்றாா் விஜய்.

காஞ்சிபுரத்தில் ஜன.24-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 24) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள... மேலும் பார்க்க

24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வரும் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடை... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 283 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 283 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, அதில் 19 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரி முதல்வா் கே.ஆா்.... மேலும் பார்க்க

கோயில் பணியாளா்கள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள கோயில் பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் மண்டல இணை ஆணையா் குமாரதுரை தலைமையில் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மண்டல அலுவலக மேலாளா் ராஜா முன்னிலை வகித்த... மேலும் பார்க்க

மாடுகள் திருட்டு: 2 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கீவளூா் கிராமத்தில் மாடுகளை திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். கீவளூா் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் வெங்கடேசன்(31) இவா் தனக்கு சொந்தமான ரூ.15,000 மதிப்புள... மேலும் பார்க்க