கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வரும் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கூட்டத்தில் வேளாண் அறிவியல் வல்லுநா்கள் மற்றும் அரசின் அனைத்துத்துறை அலுவலா்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான அறிவுரைகள்,ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளனா்.
இதுவரை பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறாத விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலா்களை அணுகி பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.