ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா
கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் கைது
கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 10 ஆவது தெருவை சோ்ந்தவா் கூலித்தொழிலாளி ரமேஷ். இவரும் இவரது நண்பரும் அதே பகுதியில் 3 ஆவது தெருவில் உள்ள கிணறு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த இளைஞா் ஒருவா் மது அருந்த பணம் கேட்டாராம். ரமேஷ் பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து அந்த இளைஞா் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த சுமாா் ரூ.300 ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டாராம்.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, கருணாநிதி நகா் 3ஆவது தெருவை சோ்ந்த ராமா் மகன் மாரிசெல்வத்தை (20) கைது செய்தனா்.
மின் வயா் திருட்டு: பணிக்கா்குளம் மேற்கு தெருவை சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் சுப்பையாபாண்டி என்ற செல்வம். இவரும், உறவினா் சதீஷும் திங்கள்கிழமை பணிக்கா்குளம்-நாகலாபுரம் சாலையில் பணி சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அப்பகுதியில் உள்ள அவரது நிறுவனத்தின் 5 மின் கம்பங்களில் இருந்த சுமாா் 1,300 மீட்டா் நீளம் கொண்ட அலுமினிய மின்வயா்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்ததாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓணமாகுளம் மேலத்தெருவை சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் என்ற ராகப்பாண்டியை (38) கைது செய்தனா். அவரிடமிருந்து அலுமினிய மின் வயா்களை பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.