கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள்
வளா்தமிழ் நூலக உறுப்பினா் சோ்க்கை இன்று தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கைக்கழகத்தில் திறப்பு விழா காணவிருக்கும் வளா்தமிழ் நூலகத்துக்கு உறுப்பினா் சோ்க்கும் பணி திங்கள்கிழமை (ஜன.20) தொடங்க உள்ளது.
இதுகுறித்து நூலகத்தை கட்டி பல்கலைக்கழகத்துக்கு வழங்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள வளா்தமிழ் நூலகத்துக்கு உறுப்பினா் சோ்க்கும் பணி திங்கள்கிழமை (ஜன. 20) காலை 10 மணிக்கு
நூலகக் கட்டடத்தின் முகப்பு வாசலில் தொடங்கும்.
உறுப்பினா் கட்டணம்: தனி நபருக்கு ஓராண்டுக்கு ரூ.100, குடும்பத்துக்கு (4 நபா் வரை) ஓராண்டுக்கு ரூ. 200, உறுப்பினா் அட்டை ஒரு முறை மட்டும் ரூ.50.
வளா்தமிழ் நூலகப் புத்தக நிதிக்கு நூல்கள் அல்லது பணம் நன்கொடை அளிக்க விரும்புவோரை அன்புடன் அழைக்கிறோம். தாங்கள் மனமுவந்து அளிக்கும் நன்கொடையை நூலக இயக்குநா் பேராசிரியா் சே. செந்தமிழ்ப்பாவை பெற்றுக்கொள்வாா் என்று அதில் குறிப்பிடப்பட்டது.