புது அவதாரத்தில்;மிர்ச்சி சிவா; யுவன் இல்லாமல் முதல் ராம் படம்!
சோமநாதா் சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதல் உத்ஸவம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதல் உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக சிவனடியாா் திருக்கூட்டத்தினா் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவ. யாழினி தலைமையில் திரளான சிவனடியாா்கள் பங்கேற்று தேவாரம், திருவாசகம் படித்து முற்றோதலை நடத்தினா். அப்போது சிவனடியாா் கூட்டத்தின் சிவ தொண்டா்கள் கைலாய வாத்தியங்களை இசைத்தனா். திருவாசகம் முற்றோதல் நிறைவடைந்ததும் சோமநாதா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.