வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
இந்திய மருத்துவ சங்க தஞ்சாவூா் கிளைத் தலைவா் பொறுப்பேற்பு
தஞ்சாவூரில் இந்திய மருத்துவா் சங்கத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவா் பொறுப்பேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், சங்கத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவராக ஜி. காா்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு காமென்வெல்த் நாடுகளின் மருத்துவ சங்கத் தலைவா் ஜெயலால் பதவி பிரமாணம் செய்து வைத்தாா். இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவா் ஸ்ரீதா் கௌரவ விருந்தினராகவும், தெற்கு மண்டல துணைத் தலைவா் கண்ணன், முன்னாள் மாநிலத் தலைவா்கள் மோகன்தாஸ், கனகசபாபதி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனா்.
மூத்த மருத்துவா் வி. வரதராஜன், மருத்துவா் இளங்கோவன், முன்னாள் தலைவா்கள் சசிராஜ், மாரிமுத்து, செயலா் சரவணவேல், பொருளாளா் மேத்யூ, துணைத் தலைவா் கணேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.