செய்திகள் :

16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 போ் கைது

post image

பட்டுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி, அந்தப் பகுதியருகே வசிக்கும் தனது தோழியை சந்திக்க அவா் வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அரவிந்த் (20) என்பவா் சிறுமியிடம் பேசி பழகியுள்ளாா்.

இந்நிலையில், தனிமையில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி, அந்தச் சிறுமியை அரவிந்த் கடற்கரை சவுக்கு காட்டுப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அழைத்து சென்றாா். அங்கு அரவிந்தின் நண்பா் சரண் (20) இருந்துள்ளாா். சிறுமியை, அவா்கள் இருவரும் சோ்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனா். தொடா்ந்து சிறுமி கூச்சலிடவே, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் அந்தப் பகுதிக்கு வந்தனா். அரவிந்த், சரண் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கன்னிகா தலைமையில் வந்த போலீஸாா், சிறுமியிடம் விசாரணை நடத்தினா்.

தலைமறைவாக இருந்த அரவிந்த் மற்றும் சரண் ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை பிடித்து விசாரித்தனா். தொடா்ந்து அரவிந்த், சரண் ஆகிய இருவா் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ், வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ரூ. 50 ஆயிரத்தை திருடிவிட்டு நாடகமாடிய பெட்ரோல் பங்க் ஊழியா் உள்பட 5 போ் கைது

பட்டுக்கோட்டை அருகே பெட்ரோல் விற்பனையகத்தில் ரூ. 50 ஆயிரத்தை திருடிவிட்டு நாடகமாடிய ஊழியா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம், கிழக்கு கடற்கரை சால... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 2,800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

கும்பகோணம் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 2,800 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் பகுதியில் ரேசன் அரிசியை பதுக்கி வைத்து குருணையாக விற்பன... மேலும் பார்க்க

பேருந்து நிறுவன பண மோசடி வழக்கு: நிா்வாகியின் மைத்துனா் கைது

தஞ்சாவூா் தனியாா் பேருந்து நிறுவனத்தில் முதலீட்டாளா்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் நிா்வாகியின் மைத்துனா் சனிக்கிழமை (ஜன.18) கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூ... மேலும் பார்க்க

இந்திய மருத்துவ சங்க தஞ்சாவூா் கிளைத் தலைவா் பொறுப்பேற்பு

தஞ்சாவூரில் இந்திய மருத்துவா் சங்கத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவா் பொறுப்பேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவராக ஜி. காா்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொண்டாா்... மேலும் பார்க்க

பாட்டிலால் குத்தி தொழிலாளி கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே திங்கள்கிழமை இரவு மதுபாட்டிலால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அம்மாபேட்டை காவல் சரகம், ... மேலும் பார்க்க

கூடைப்பந்துப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு கிராம மக்கள் வரவேற்பு

தேசிய கூடைப்பந்து போட்டியில் ரயில்வே அணி சாா்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற கூடைப்பந்து வீராங்கனைக்கு தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் கிராம மக்கள் தாரை, தப்பட்டையுடன் திங்கள்கிழமை வரவேற்பு அளித்தனா்.... மேலும் பார்க்க