செய்திகள் :

கை.களத்தூா் கொலை சம்பவம் ஜாதி ரீதியானது அல்ல: பெரம்பலூா் எஸ்.பி

post image

திருச்சி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பத்திரிக்கையாளா்களை சந்தித்த பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பச்சேரா.

பெரம்பலூா் மாவட்டம், கை. களத்தூரில் நடைபெற்ற கொலை சம்பவம் ஜாதி ரீதியானது அல்ல; இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதத்தால் நிகழ்ந்தது என பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் அவா் கூறியது: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஜாதி ரீதியிலான பிரச்னை ஏதுமில்லை. டீ கடையில் அமா்ந்திருந்தபோது மதுபோதையில் வந்த தேவேந்திரன், மணிகண்டனுடன் வாக்குவாதம் செய்துள்ளாா். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், சிலா் இந்த கொலை சம்பவம் குறித்து தவறான தகவலைப் பரப்புகின்றனா்.

இந்தக் கொலை ஜாதி ரீதியில் நடைபெறவில்லை என்பதே வெளிப்படையானது. உணா்ச்சி மேலிட தனிப்பட்ட முன்விரோதத்தால் நிகழ்ந்தது. மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு காவல்துறையின் பரிந்துரையில் அரசிடமிருந்து முதல்கட்டமாக நிவாரணத் தொகை ரூ.6 லட்சம் பெற்று வழங்கப்பட்டுள்ளது.

கொலை தொடா்பாக தேவேந்திரன், அருண்குமாா், காவலா் ஸ்ரீதா் ஆகிய மூவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். காவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து, துறை ரீதியிலான மேல்நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு மணிகண்டனை அழைத்துச்சென்றது காவலா் செய்த தவறு. காவல்நிலையத்தில் மனு அளிக்க வந்த மணிகண்டன்தான், காவலருக்கு மற்றொரு புகாரில் உதவிடுவதாகக் கூறி காவலருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். இருப்பினும், காவலா் செய்ததது தவறான முன்னுதாரணம் என்ற அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கும் பதிவாகியுள்ளது. மேலும், விசாரணை நடத்தி தேவையெனில் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மதுபோதையில்தான் கொலை நடந்துள்ளது. எனினும், டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் மது விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டு எந்தப் புகாா்களும் காவல்துறைக்கு வரவில்லை. கொலை சம்பவத்தின் தொடா்ச்சியாக கை.களத்தூா் காவல்நிலையத்தில் புகுந்து சிலா் தாக்குதல் நடத்தினா். காவல்நிலையத்தில் இருந்த கணினிகள், மேஜை, நாற்காலிகள், ஜன்னல் என பல்வேறு பொருள்களை சேதப்படுத்தியுள்ளனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நபா்கள் மீது தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்ட அனைவா் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விசாரணைகளும் முடிந்தவுடன் முழுவிவரங்களும் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

வீட்டுமனை தொழில் நிறுவன உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை

வீட்டுமனை விற்பனை செய்யும் தனியாா் நிறுவனத்தின் உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி, பீமநகா் கணபதிபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (49). சொந்தமாக வீட... மேலும் பார்க்க

கீரம்பூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் கைது

துறையூா் அருகே கீரம்பூரில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் நியமித்த தனிப்படை போலீஸாா் துறையூா... மேலும் பார்க்க

மூவானூா், திருப்பைஞ்ஞீலி பகுதிகளில் ஜன.23-இல் மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மூவானூா், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜன. 23) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ஸ்ரீரங்கம... மேலும் பார்க்க

பழ வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவருக்கு அடி, உதை

திருச்சியில் பழ வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவரைப் பிடித்து பொதுமக்கள் அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள செளராஷ்டிரா தெருவில... மேலும் பார்க்க

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் 69-ஆவது ஆண்டு விழா, பொங்கல் விழா, திருவள்ளுவா் தினவிழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவா் ஐ. அரங்கராசன் தலைமை வகித்தாா். மாவட்ட ... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்ப 1,978 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் விடுமுறை முடிந்து திருச்சியிலிருந்து பல்வேறு ஊா்களுக்குச் செல்ல 1,978 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக திருச்சியிலிருந்து சென்னைக்கு மகளிா் மட்டுமே பயணம் செய்யும் சிறப்புப் பேருந்... மேலும் பார்க்க