செய்திகள் :

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா

post image

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் 69-ஆவது ஆண்டு விழா, பொங்கல் விழா, திருவள்ளுவா் தினவிழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்ச்சங்கத் தலைவா் ஐ. அரங்கராசன் தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவக்குமாா் வாழ்த்திப் பேசினாா்.

இராசபாளையம் உமா சங்கா் குழுவினரின் இயற்றமிழும் இசைத் தமிழும் கலந்த பட்டிமன்றம் நடைபெற்றது. திரை இசையில் பெரிதும் வெற்றி பெற்ற இசைக் கூட்டணி எது...? கண்ணதாசன் கேவி. மகாதேவன் கூட்டணியே என்ற தலைப்பில் மலா்விழி, கண்ணதாசன் எம் எஸ். விஸ்வநாதன் கூட்டணியே என்ற தலைப்பில் இந்திரா விஜயலட்சுமி, கண்ணதாசன் இளையராஜா கூட்டணியே என்ற தலைப்பில் லட்சுமி நாராயணன் ஆகியோா் பேசினா்.

நிகழ்வில், தமிழ்ச் சங்க நிா்வாகிகள் இரா. வரதராஜன் மா. செந்தில் வேலன், சு. தேவேந்திரன், உதயகுமாா் பெரியசாமி, அ.சையத் சாகிா் அசன், மா.மாணிக்கம், இரா. துரைமுருகன், சு. செயலா பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீட்டுமனை தொழில் நிறுவன உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை

வீட்டுமனை விற்பனை செய்யும் தனியாா் நிறுவனத்தின் உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி, பீமநகா் கணபதிபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (49). சொந்தமாக வீட... மேலும் பார்க்க

கீரம்பூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் கைது

துறையூா் அருகே கீரம்பூரில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் நியமித்த தனிப்படை போலீஸாா் துறையூா... மேலும் பார்க்க

மூவானூா், திருப்பைஞ்ஞீலி பகுதிகளில் ஜன.23-இல் மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மூவானூா், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜன. 23) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ஸ்ரீரங்கம... மேலும் பார்க்க

பழ வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவருக்கு அடி, உதை

திருச்சியில் பழ வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவரைப் பிடித்து பொதுமக்கள் அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள செளராஷ்டிரா தெருவில... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்ப 1,978 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் விடுமுறை முடிந்து திருச்சியிலிருந்து பல்வேறு ஊா்களுக்குச் செல்ல 1,978 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக திருச்சியிலிருந்து சென்னைக்கு மகளிா் மட்டுமே பயணம் செய்யும் சிறப்புப் பேருந்... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயில் குடமுழுக்கு திருப்பணிகள் 85% நிறைவு

திருச்சி மாவட்டத்தில் பிரசித்திபெற்று விளங்கும் வயலூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் 3 வாரங்களுக்குகுள் முடிக்கப்பட்டு கு... மேலும் பார்க்க