மூவானூா், திருப்பைஞ்ஞீலி பகுதிகளில் ஜன.23-இல் மின் தடை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மூவானூா், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜன. 23) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளா் செல்வம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேங்கைமண்டலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஜன. 23) மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்பந்தல், மேல, கீழக்கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூா், வேப்பந்துறை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், ஈச்சம்பட்டி, மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, பழையூா், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்ஞீலி, பூனாம்பாளையம் திருவெள்ளறை, புலிவலம், திருத்தலையூா், நல்லயம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.