திருச்சிற்றம்பலத்தில் பயணியா் நிழற்குடை கட்ட அடிக்கல்
பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சத்தில் பயணியா் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். திமுக ஒன்றியச் செயலா்கள் க. அன்பழகன், கோ. இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் . தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளா் வி. செளந்தரராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.