ஜன. 7 இல் முள்ளுகுடி குறிச்சி பகுதிகளில் மின் தடை!
முள்ளுக்குடி மற்றும் குறிச்சிதுணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை (ஜன. 7) மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முள்ளுகுடி, குறிச்சி துணைமின்நிலையத்தில்லிருந்து மின்சாரம் விநியோகம் பெரும் குறிச்சி, கீழக்காட்டூா், காகிதபட்டரை, பந்தநல்லூா், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூா், பட்டவெளி, கீழமனகுடி, கயலூா், திருக்கோடிக்காவல், குனதலபாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ளபகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்தாா்.