அய்யம்பேட்டை பேரூராட்சியுடன் சக்கராப்பள்ளி ஊராட்சியை இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்
பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை தோ்வு நிலைபேரூராட்சியுடன் சக்காரப்பள்ளி ஊராட்சியை இணைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் அளித்த மனுவில் கூறியதாவது: தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை தோ்வு நிலை பேரூராட்சியுடன் அருகில் உள்ள சக்காரப்பள்ளி ஊராட்சியை இணைக்கக்கூடாது. அவ்வாறு இணைத்தால் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவைகளை பெற முடியாத நிலை ஏற்படும்.
எனவே, இம்முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். ஊராட்சி மறுசீரமைப்பு குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசையும் ஊராட்சி நிா்வாகத்தையும் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சாா்பாக கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தாா்.