செய்திகள் :

அதிமுகவினர் கைது: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

post image

அதிமுகவினரின் கைதுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக இன்று(டிச. 30) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் கைதான ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என திமுக அமைச்சர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை கைது செய்யவேண்டும் என்றும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அதிமுக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதில் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க | ஆளுநரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

இதையடுத்து அதிமுகவினரின் கைதுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில், அவர்களை கைது செய்து ஜனநாயகத்தை அடக்கும் திமுக அரசின் இந்த செயல் நிச்சயமாகக் கண்டிக்கக்கூடிய விஷயம்.

மாணவிக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக கடமை, இதைத் தமிழக அரசு தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, ஜனநாயக ரீதியாகப் போராடுபவர்களைக் கைது செய்வதன் மூலம் அடக்கிவிடலாம் என்று இந்த அரசு மனக்கோட்டை கட்டக் கூடாது. இது தவறான முன் உதாரணம்,

இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. எனவே கைது செய்தவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | 2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: ஜன. 13-ல் முதல்வர் தொடக்கி வைக்கிறார்.

2025ஆம் ஆண்டின் பொங்கல் விழாவையொட்டிதமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் சிறக்கும் வகையில் நடைபெறும் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா -2025’ கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் ஜன. 13 ஆம் தேதி தொடங்கி வை... மேலும் பார்க்க

மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று இந்தியா வருகை!

மாலத்தீவு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று (ஜன.2) இந்தியா வருகிறார். இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவு நாடான மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா கலீல் இன்று ... மேலும் பார்க்க

திரு. மாணிக்கம் படத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான திரு.மாணிக்கம் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை சம்பவத்தைவைத்து எடுக்கப்பட்ட திரு. மாணிக்கம் திரைப்படம் ஒரு அற்புதமான படைப்பு என்று அவர் ப... மேலும் பார்க்க

மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம்!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று (ஜன.2) மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தின் மலைகள் சூழ்ந்த மாவட்டமான சூராசந்திரப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜன.2) மதி... மேலும் பார்க்க

நேபாளத்தில் நிலநடுக்கம்!

நேபாளத்தின் வடக்கு மாவட்டங்களில் இன்று (ஜன.2) மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பக்கத்து நாடான நேபாளத்தில் இன்று (ஜன.2) மதியம் 1.02 மணியளவில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. விவகாரம்: சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் இன்று(ஜன. 2) நேரில் சென்று விசாரணை நடத்தினர்.சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த டிச. 23-ஆம் த... மேலும் பார்க்க