நேபாளத்தில் நிலநடுக்கம்!
நேபாளத்தின் வடக்கு மாவட்டங்களில் இன்று (ஜன.2) மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் பக்கத்து நாடான நேபாளத்தில் இன்று (ஜன.2) மதியம் 1.02 மணியளவில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடக்கே சுமார் 70 கி.மீ தொலைவிலுள்ள சிந்துபால்சவுக் மாவட்டத்தை மையமாகக் கொண்டு 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பாக்: மே.9 கலவரத்தின் குற்றவாளிகள் 19 பேரின் கருணை மனு ஏற்பு!
இந்த நிலநடுக்கமானது காத்மண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உணரப்பட்டுள்ள நிலையில் இதனால் ஏதேனும் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமும் ஏற்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை நேபாளை ஒட்டியுள்ள சில இந்தியப் பகுதிகளிலும் உணரப்படத்தாகவும் கூறப்படுகிறது.
கடந்த 20 நாள்களில், இது 9 ஆவது முறையாக 3 ரிக்டர் அளவுக்கு மேலான நிலநடுக்கம் நேபாளத்தில் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 8 நிலநடுக்கமும் அந்நாட்டின் மேற்கு பகுதிகளில் பதிவான நிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கமானது அந்நாட்டின் வடக்கு திசையில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.