செய்திகள் :

முக சீரமைப்பு சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமிக்கு வீடு: முதல்வர் வழங்கினார்

post image

சென்னை: அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவி மற்றும் மாற்றுத்திறனாளி அனுசுயாவுக்கு தானியங்கி சக்கர நாற்காலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோரை ஊராட்சி வீராபுரம் பகுதியைச் சார்ந்த சௌபாக்யா - ஸ்டீபன் தம்பதியினரின் மகளான செல்வி.தான்யா முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்ததன் அடிப்படையில் முதல்வர், சிறுமி தான்யாவின் உடல் நிலையினை கருதி அறுவை சிகிச்சை செலவு முழுவதையும் ஏற்றதுடன் சிறுமி கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களின் பெற்றோருக்கு இலவச வீட்டு மனையினை வழங்கி அரசின் மூலம் வீடு கட்டித்தர ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் சார்பில் வழங்கப்பட்ட 3 சென்ட் வீட்டு மனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகட்டி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட செல்வி. தான்யாவின் தாய் சௌபாக்யாவுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பானவேடு தோட்டம் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி செல்வி. அனுசுயாவுக்கு தானியங்கி சக்கர நாற்காலியை வழங்கினார்.

தனக்கு மறுவாழ்வு அளித்து இலவச வீடு வழங்கியதற்காக சிறுமி தான்யா மற்றும் அவரது பெற்றோரும், தானியங்கி சக்கர நாற்காலியை வழங்கியதற்காக செல்வி அனுசுயா மற்றும் அவரது பெற்றோரும் முதல்வருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு!

இந்தூரில் பிச்சை எடுப்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்ததற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் பிச்... மேலும் பார்க்க

நாட்டில் 3 பேருக்கு ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று!

இந்தியாவில் ஹெச்எம்பிவி தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் 2019-இல் பரவிய கரோனா தொற்று உலக நாடுகளை புரட்டிப் போட்டது. லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். ஐந்தாண்டுகளுக்... மேலும் பார்க்க

2 படகுகளில் 260 ரோஹிங்கியா அகதிகள்! இந்தோனேஷியாவில் தஞ்சம்!

இரண்டு படகுகள் மூலம் 260க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேஷியா நாட்டுக் கரைகளை வந்தடைந்தனர்.மியான்மர் நாட்டிலிருந்து 2 படகுகள் மூலம் பயணித்த 260க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் நேற்று (ஜன.5)... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிராக திமுக நாளை(ஜன. 7) கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து நாளை(செவ்வாய்க்கிழமை) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இ... மேலும் பார்க்க

சட்டப்பேரவையின் மரபு காக்கப்பட வேண்டும்: விஜய்

தமிழக சட்டப்பேரவையின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று(ஜன. 6) கூடிய நிலையில் ஆள... மேலும் பார்க்க

ஆப்கானின் மீதான பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.ஆயுதம் ஏந்திய பயங்கர வாதக் குழுக்களுக்கு தலிபான் அரசு அடைக்கலம் தருவதாகவும் அதனால் தீவிரவாதிகள் பதுங்... மேலும் பார்க்க