சௌமியா அன்புமணி கைது: பாமகவினர் ஆர்ப்பாட்டம்
சௌமியா அன்புமணியின் கைதைக் கண்டித்து கடலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தி பாமக மகளிரணி இன்று போராட்டம் நடத்தியது.
திமுக அரசைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிரணி அனுமதியின்றி போராட்டம் நடத்திய நிலையில், பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் சௌமியா அன்புமணியும் கைது செய்யப்பட்டார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து சௌமியா அன்புமணியின் கைதைக் கண்டித்து கடலூரில் பாமகவினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதற்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.