செய்திகள் :

மின்சார ரயில்கள் ரத்து: நாளை(ஜன.5) கூடுதல் பேருந்துகள் இயக்கம்

post image

மின்சார ரயில்கள் ரத்து காரணமாக நாளை கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

05.01.2025 அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் காலை 07.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் இரயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் காலை 11.00 மணி முதல் மாலை 16.00 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையும் இரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை(ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 வரை புறநகர் ரயில்கள் ரத்து

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 05.01.2025 அன்று தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை மா.போ.கழகம் இயக்க உள்ளது.

மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி தொற்று: சுகாதாரத் துறை

தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.எச்எம்பிவி தொற்று புதிதல்ல என்றும், பல ஆண்டுகளாக இந்த வைரஸ் இருப்பதால் மக்கள் அச்சமடையத் தேவையில்ல... மேலும் பார்க்க

சட்டப்பேரவை நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுகிறது: ஆளுநர் மாளிகை

தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் ... மேலும் பார்க்க

தேசிய கீதம் இருமுறை இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்: அண்ணாமலை

ஆளுநர் வருகையின் போதும், விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,'திமுக அரசு, தங்கள் ... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராமப்புற ஊராட்சி என, 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு முன் நடைபெ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் மரபுகளை ஆளுநர் மாற்ற வற்புறுத்துவது ஏற்புடையதல்ல: திருமாவளவன்

தமிழ்நாட்டின் மரபை இன்னும் ஆளுநர் அறிந்திராமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று... மேலும் பார்க்க

பொங்கலுக்கு 14,104 சிறப்புப் பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல் துறையுடன் இன்று... மேலும் பார்க்க