குற்றங்களைப் பதிவு செய்ய மறுக்கிறது காவல் துறை: அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது,
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.
குற்றங்கள் அதிகமாக நடப்பது தெரியக்கூடாது என்பதற்காக குற்றங்களைப் பதிவு செய்ய காவல் துறை அனுமதி மறுக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து அனுப்புகிறது காவல் துறை.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக, மதுரையில் நாளை திட்டமிட்டபடி பாஜக மகளிரணி பேரணியைத் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.