செய்திகள் :

பாக். டெஸ்ட்: 18 வயது வீரருக்கு தெ.ஆப்பிரிக்க அணியில் வாய்ப்பு!

post image

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 18 வயதுடைய இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவும் தருவாயில் இருந்த தென்னாப்பிரிக்க அணி பின்வரிசையில் பேட்டிங் செய்த பந்துவீச்சாளர்களின் அதிரடியால் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஒரு சம்பிரதாயத்துக்காக மட்டுமே பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொடரை சமன் செய்வதற்கு பாகிஸ்தான் அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் மூன்று மாற்றங்களுடன் 18 வயதான குவேனா மபாகாவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்ஜி இடது தொடை காயத்தால் விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் வியான் முல்டர் அணியில் இணைந்துள்ளார். ரியான் ரிக்கெல்டன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார். காயத்தால் விலகியிருந்த கேசவ் மகராஜ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். குவேனா மபாகா முதல் தரப் போட்டிகளில் இதுவரை 60.5 ஓவர்கள் பந்துவீசியுள்ளார்.

இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை(ஜன.3) நியூலேண்டில் இந்திய நேரப்படி 2 மணிக்குத் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்க அணி:

எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா.

பும்ரா இல்லாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையி... மேலும் பார்க்க

ஒருவர் இரட்டை சதம், இருவர் சதம் விளாசல்; தென்னாப்பிரிக்கா 615 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 615 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ... மேலும் பார்க்க

பிசிசிஐ செயலராக பொறுப்பேற்கவுள்ள தேவஜித் சாய்கியா!

பிசிசிஐ-யின் புதிய செயலராக தேவஜித் சாய்கியா பொறுப்பேற்கவுள்ளார்.பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பிசிசிஐ-ன் அடுத... மேலும் பார்க்க

முதல் பந்திலிருந்து ஆஸி.யை திணறடித்த ரிஷப் பந்த்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

சிட்னி டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவா... மேலும் பார்க்க

வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!

வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சைம் ஆயூபுக்கு காயம் ஏற்பட்டது.பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் ... மேலும் பார்க்க