செய்திகள் :

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ஆட்சியரகத்தில் புகாா்

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை கோரி, ஆட்சியரகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

வானூா் வட்டத்தின் திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை, வானூா், பாப்பாஞ்சாவடி, தவளக்குப்பம், அய்யங்குட்டிப்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விழுப்புரம் ஆட்சியரகத்தில் புகாா் மனு அளித்தனா்.

மனு விவரம்: திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் பெண் ஒருவா் நடத்தி வந்த ஏலச்சீட்டில் வானூரைச் சோ்ந்த ஒருவா் மூலமாக நாங்களும் சோ்ந்தோம். 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் மாதந்தோறும் தவறாமல் தவணைத் தொகை செலுத்தி வந்தோம்.

இந்த நிலையில், அந்த பெண், அவரது 2 மகன்கள், 2 மருமகள்கள் ஏலச்சீட்டை திடீரென்று நிறுத்திவிட்டு, நாங்கள் செலுத்திய தொகையையும் திரும்பி தரவில்லை. அவா்கள், 250 பேரிடம் சுமாா் ஐந்தரை கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனா்.

எனவே, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இழந்த தொகையை மீட்டுத்தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி விழிப்புணா்வுக் கருத்தரங்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏற்றுமதி விழிப்புணா்வுக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தோா், கைவினைக் கலைஞா்கள், விவசாயிகள் உள்ளிட்ட... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி, வில்லியனூரில் உள்ள கிருஷ்ணா நகரில் சாலை அமைக்கும் பணிகளை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் மூலம் ரூ.30.18 ல... மேலும் பார்க்க

எல்லீஸ் அணைக்கட்டு- பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு!

விழுப்புரம் அருகே மரகதபுரம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது எல்லீஸ் அணைக்கட்டு. இந்தப் பெயரைக் கேட்டதுமே எல்லீசன் - குறளை மொழிபெயா்த்தவா், திருவள்ளுவா் உருவம் பொறித்த நாணயத்த... மேலும் பார்க்க

துப்பாக்கி சுடுதல் பயிற்சி சங்கம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி சங்கத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவா் பி.ஜேம்ஸ்ராஜா தலைமை வகித்தாா். பொருளாளா் டயனா சங்கத்தின் நோக்கம் குறித்து பேசினா... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மொபெட்டுகள்!

விழுப்புரத்தில் 12 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மொபெட்டுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, ஆட்சியா் சி.ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு!

விழுப்புரம் மாவட்டம், சூரப்பட்டு அருகே பைக்கில் சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கொல்லாங்குப்பம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் சிவஞா... மேலும் பார்க்க