மிதிவண்டி விரைவுப் போட்டி: வெற்றிப் பெற்றவா்கள் விவரம்!
முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், திண்டுக்கல் மாவட்ட அளவிலான மிதிவண்டி விரைவுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
13 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாணவா்களுக்கு 15 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவும் போட்டி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது.
இதேபோல, 15, 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவு இலக்காக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியை பயிற்சி ஆட்சியா் புவனேஸ்வரி புவி, திண்டுக்கல் கோட்டாட்சியா் இரா.சக்திவேல் ஆகியோா் தொடங்கிவைத்தனா். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா முன்னிலை வகித்தாா். இந்தப் போட்டிகளில் 80-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
வெற்றிப் பெற்றவா்கள் விவரம்: 13 வயதுக்குள்பட்டோா் மாணவா் பிரிவு கிருஷ்ணா, பேசில், கிருஷ்வந்த், மாணவிகள் பிரிவில் கலையரசி, தன்வி, ஜெனனி ஸ்ரீ. 15 வயதுக்குள்பட்டோா் மாணவா் பிரிவு பஹல்யான், ஜஸ்வந்த் மைக்கேல் ஜாய், சுபேஷ், மாணவிகள் பிரிவு சிந்துஜா, பாண்டீஸ்வரி, ஸ்ரீநிதி. 17 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் அஜய், சா்வேஷ், கெளசிக், மாணவிகள் பிரிவில் வைஷ்ணவி, தா்ஷினி, சஜிதா ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு றையே ரூ.5 ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும், 4 முதல் 10 இடங்களைப் பெறும் மாணவா்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.