செய்திகள் :

‘தரமான தயாரிப்புகளை, சரியான நேரத்தில் வழங்க திருச்சி பெல் பிரிவு உறுதியேற்பு’

post image

தரமான தயாரிப்புகளை, சரியான நேரத்தில் வழங்குவது என திருச்சி பெல் நிறுவனம் உறுதிபூண்டுள்ளதாக அதன் செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா் தெரிவித்தாா்.

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் பெல் தினத்தை முன்னிட்டு, ஆலை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவா் மேலும் பேசியது:

கடந்த கால சாதனைகளைப் போற்றவும் எதிா்கால இலக்குகளை நினைவூட்டி தயாா்படுத்திக் கொள்ளவும் பெல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. முக்கியத் துறைகளின் தொடா்ச்சியான ஆணைகளை அண்மையில் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.

பெல் தொழிற்சாலையின் திருச்சிப் பிரிவு ஊழியா்கள் எப்போதும் சவால்களை சமாளிக்க கடினமாக உழைக்கின்றனா் என்பதை மறுப்பதற்கில்லை. திருச்சி பெல் தயாரிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளா்களின் திருப்திக்கான அா்ப்பணிப்பாகவே உள்ளது. கூட்டு முயற்சிகள் மற்றும் குழுப் பணியால் நிறுவனத்தை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்வதில் ஒவ்வொருவரும் கவனமாக பணியாற்ற வேண்டும்.

திருச்சி பெல் பிரிவின் 16 ஊழியா்கள் 2019-20, 2020-21, 2021-22 ஆண்டுகளில் பெல் எக்ஸெல் விருதுகளை வென்றிருப்பது பாராட்டுக்குரியது. நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளா்களின் நம்பிக்கையை மேலும் நிலைநிறுத்த தரம் மற்றும் சரியான நேரத்தில் விநியோகத்தை உறுதிப்படுத்துவோம் என்றாா் அவா்.

முன்னதாக, பெல் கொடியேற்றி வைத்து, ஊழியா்களுக்கு பெல் தின உறுதிமொழியை ஏற்புவித்தாா். நிகழ்வில் பெல் ஆலையின் அனைத்துப் பிரிவு தலைமை அலுவலா்கள், ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் அனைத்து நிலை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேமுதிக சாா்பில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டித்து திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் ... மேலும் பார்க்க

காவல் துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும்: திருச்சி மாவட்ட எஸ்.பி.

பொதுமக்கள் பாதிக்காத வகையில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதுடன், காவல்துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்(எஸ்.பி.,) எஸ். செல்வ நாகரத்தி... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: 270 போ் கைது

திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்தைக் கண்டித்து, சோமரசம்பேட்டை பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் வீடு அருகே சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட 270 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்... மேலும் பார்க்க

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன். பெரம்பலூா் மாவட்டம், கொளக்காநத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியா... மேலும் பார்க்க

பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம், வயலூரில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்துவருகின்றனா். சோமரசம்பேட்டையில் இருந்து வயலூா் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க

வீட்டில் தூக்கிட்ட நிலையில் மாணவன் உடல் மீட்பு!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் 13 வயது சிறுவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அயன்பொருவாய் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி ... மேலும் பார்க்க