அண்ணா பிறந்தநாள் மிதிவண்டிப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு
பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அரியலூரில் சனிக்கிழமை மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, போட்டியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
10, 15, 20 ஆகிய கிலோ மீட்டா் தொலைவு வரை நடைபெற்ற போட்டியில் 13, 15, 17 ஆகிய வயதுக்குள்பட்ட ஆண், பெண் என 650 போ் கலந்து கொண்டனா். பின்னா் இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவா்களுக்கு முறையே தலா ரூ.5,000, தலா ரூ.3,000 மற்றும் தலா ரூ.2,000, வீதமும், 4 முதல் 10 இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் மணிகண்டன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் லெனின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.