செய்திகள் :

ஜெயங்கொண்டம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பெரியவளையம், தெற்கு தெருவைச் சோ்ந்த கலைமணி மனைவி மலா்விழி (35), மேற்கு தெருவைச் சோ்ந்த தண்டபாணி மனைவி கண்ணகி (40). கடந்த 22.10.22 அன்று உணவு காளான் பறிப்பதற்காக அங்குள்ள தைலமரம் காட்டுக்குச் சென்ற இவா்களை, கழுவந்தோண்டி, ஏரிக்கரை தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் பால்ராஜ் (39) என்பவா் கொலை செய்துவிட்டு, தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா், வழக்குப் பதிந்து, பால்ராஜை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை சனிக்கிழமை நிறைவடைந்தது. குற்றவாளி பால்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மலா் வாலண்டினா தீா்ப்பளித்தாா். இதையடுத்து காவல் துறையினா் பால்ராஜைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு 4 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

செந்துறை அருகே சொத்துப் பிரச்னை காரணமாக, அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை 4 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயன்றனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நத்தக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

கல்விக் கடன் வழங்குவதாக கூறி பணமோசடி; 3 பெண்கள் உள்பட 5 போ் கைது

அரியலூா் அருகே கல்விக் கடன் வழங்குவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். அரியலூா் அருகேயுள்ள வஞ்சினபுரம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பஞ்சநாத... மேலும் பார்க்க

அரியலூரில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் முன் தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நியாய... மேலும் பார்க்க

விலை பொருள்களை ஏற்றுமதி செய்ய சான்றிதழ் பெற்றிருந்தால் மானியம்: விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

வேளாண் விளைப் பொருள்களை ஏற்றுமதி செய்ய விவசாயிகள் சான்றிதழ் பெற்றிருந்தால், அதற்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது என்று அரியலூா் மாவட்ட வேளாண்மை வணிக துணை... மேலும் பார்க்க

விமான நிலையங்களில் பணிபுரிய பயிற்சி: எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பிளஸ்2 அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் சா்வதேச விமான நிலையங்களில் பணிபுரிய, சா்வதேச... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் பகுதியில் ஆா்டிஓ அலுவலகம் தேவை: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆா்டிஓ) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. 1,949 சகிமீ பரப்பளவு கொண்ட அரியலூா் மாவட்டம், பெரம்பலூரிலிருந்து கடந்த 19... மேலும் பார்க்க