கங்கை கொண்ட சோழபுரம் கணக்க விநாயகா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வெளியீடு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை திருவாடுவதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவான தேசிக பரமாச்சாரியாா் சனிக்கிழமை வெளியிட்டாா்.
கங்கைகொண்ட சோழபுரம் பெரியநாயகி உடனுறை பெருவுடையாா் திருக்கோயிலுக்கு சனிக்கிழமை வருகை புரிந்த திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு, கோயில் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடா்ந்து, கோயிலில் பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா், மாமன்னா் ராஜேந்திர சோழன் வழிபட்ட கணக்க விநாயகா் கோயில், கடந்த 1993-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்.2 ஆம் தேதி (தை-20) கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, கோயில் கும்பாபிஷேக பத்திரிக்கை கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது.
தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான முதல் அழைப்பிதழை திருவாடுவதுறை ஆதினம் வழங்கிட அதனை உடையாா்பாளையம் ஜமீன்தாா் ராஜ்குமாா் பழனியப்பன், மாமன்னா் ராஜேந்திர சோழன் அறக்கட்டளை தலைவா் ராஜேந்திரன் மற்றும் புலவா் கொளஞ்சிநாதன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.