Book Fair: காதல் சரி என்றால் சாதி தப்பு... பெருமாள் முருகனின் புதிய படைப்புகளும் பரிந்துரைகளும்
தமிழ் இலக்கிய வெளியில் தன்னுடைய எதார்த்த எழுத்தால் முக்கிய இடத்தைப் பதித்த எழுத்தாளர் பெருமாள் முருகனைத் தற்போது நடந்துகொண்டிருக்கும் 48வது சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து அவருடைய படைப்புகள் பற்றிப் பேசினோம்.
"இந்த ஆண்டு என்னுடைய 4 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
1. போண்டு - செல்லப் பிராணிகள் பற்றிய 11 சிறுகதைகளின் தொகுப்பு,
2. காதல் சரி என்றால் சாதி தப்பு - நான் அரசு கலைக் கல்லூரியில் முதல்வராகச் சில காலம் பணியாற்றினேன். அந்த அனுபவங்கள் மற்றும் கல்வி சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு.
3. பாதி மலையேறுன பாதகரு - என்னுடைய வாழ்க்கை அனுபவங்களும் படைப்புகள் உருவான பின்னணியையும் பற்றிய கட்டுரை தொகுப்பு.
மேலும், தமிழில் புது முயற்சியாகக் காலச்சுவடு பதிப்பகம் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை கிராஃபிக் நாவலாக மாற்றியிருக்கிறார்கள். இதற்கான எழுத்தாக்கத்தில் பண்ணியிருக்கிறேன்.
மற்ற சில புத்தகங்கள் மறுபதிப்புகளாக வந்திருக்கின்றன" என்று கூறினார்.
வாசகர்களுக்குப் புத்தகங்கள் பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்டதற்கு,
1. சாகித்யா அகடெமி விருது பெற்ற ஆ.இரா. வேங்கடாசலபதியின் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் மற்றும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை,
2. கு. அழகிரிசாமி கட்டுரைகள் தொகுப்பு மற்றும் அவர் கி ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு.
3. மயிலன் ஜி சின்னப்பன் சிறுகதைகள்
ஆகிய புத்தகங்களைப் பரிந்துரைத்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...